Friday, 7 September 2018

increase your sperm count விந்து உற்பத்தி

வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.
2, அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
3,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
4,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்..



5,ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு  அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.
6, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்..